இன்றைய நாளுக்கான சில்லுனு ஒரு காதல் எபிசோடில் 23/02 இல் ஏற்கனவே வெளியான புரமோவை அடிப்படையாக வைத்தே இன்றைய கதை நடக்கின்றது. ஆரம்பத்தில் கயலை காப்பாற்றி அழைத்து வந்து கட்டிலில் படுக்கவைக்கும் கொள்ளைகாரனின் மனைவி , இதனை தொடர்ந்து சந்தேகத்தில் கயலை தனது அண்ணணுடன் ( கொள்ளையன் )சேர்ந்து கொள்ள நினைக்கும் குணா கயலை கொள்ள வாளை எடுத்துவர அவனது அண்ணி கயலை கொள்ள விடாமல் தடுத்து கயலை தண்ணீர் தெளித்து எழுப்புகிறார். கயலும் தனக்கு ஏதும் தெரியாது போல் எழும்புகிறார். “நான் எங்கே இருக்கேன் , என்ன விடுங்க " என கதற அந்த பெண்மணி நீ பாதுகாப்பாக இருப்பதாவும் எப்படி நீ இங்கு வந்தாய் எனவும் வினவுகிறார். கயல் தான் இங்கு வந்த கதையைக்கூற கொள்ளயனுக்கு சந்தேகம் வருகின்றது. கயல் போலீஸ் அனுப்பிய ஆளாக இருக்குமோ? என சந்தேகப்பட கயல் திருட்டுமுழி முழிக்கிறார்.